• Oct 08 2024

பயில்வான் ரங்கநாதன் வீட்டில் விசேஷம்... வெளியான புகைப்படங்கள் இதோ...

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் பயில்வான் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர். இவர் தற்போது பத்திரிகையாளராகவும், திரைப்பட விமர்சகராகவும் பணியாற்றுகின்றார். ரங்கநாதன் திரைப்படம் விமர்சிப்பதை தாண்டி மற்றவர்களின் தனிப்பட்ட வழக்கை குறித்தும் அவ்வப்போது விமர்சித்து பல சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.


இவரது இளைய மகளுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறி முன்னர் சில புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தார். தற்போது, பயில்வான் மகளுக்கும் சிவா என்பவருக்கும் கடந்த 14 - ம் தேதி திருமணம் நடைபெற்று உள்ளது. அந்த திருமண புகைப்படங்களை சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வம் கேரக்டரில் நடிக்கும் பழனியப்பன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


இந்த திருமண நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைவரும் திரைப்பட நடிகருமான சீமான் கலந்துகொண்டு திருமணமான புது ஜோடிகளை வாழ்த்தியுள்ளார். மேலும், பல சினிமா நட்சத்திரங்கள் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். 


Advertisement