• Sep 18 2024

10 வருடத்துக்கு பின்னர் சூர்யா 44ல் இணையும் நடிகை... யார் தெரியுமா ?

subiththira / 5 days ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவரது 44-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.


இதன் முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமான் மற்றும் ஊட்டியில் ஆகஸ்ட் மாதம் ஆரம்பமானது. தற்போது அங்கு படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. 


இந்நிலையில் சூர்யாவின் 44 -வது படத்தில் நடிகை நந்திதா தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கப்போவதாகவும், டைட்டில் மற்றும் டீஸர் விரைவில் வெளிவர உள்ளது எனவும் கூறப்படுகிறது. 


Advertisement

Advertisement