• Sep 14 2026

தளபதி படத்தை தயாரிக்க ஆசைப்பட்ட 48 வயது நடிகை... விஜய் என்ன சொன்னார் தெரியுமா?

shali / 2 years ago

Advertisement

Listen News!

உச்ச நட்சத்திரமாக வசூலில் சாதனை படைக்கும் நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் விஜய். இவரை வைத்து ஒரு படமாவது தயாரிக்க வேண்டும் என்கிற ஆசை பல தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது. அந்த வகையில் நடிகர் விஜய்யின் படத்தை தயாரிக்க வேண்டும் என்கிற ஆசையோடு நடிகை சிம்ரன் இருந்ததாக செய்தி தற்போது பரவி வருகிறது. 


விஜய் இறுதியாக கோட் திரைப்படத்தில் நடித்திருந்தார். அது விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய்யின் கடைசி படமாவது தனக்கு கிடைக்கும் என எண்ணி சிம்ரன் கேட்டுள்ளாராம்.


ஆனால், விஜய் என் படத்தை தயாரித்தால் கண்டிப்பாக பல பிரச்சனைகள் வரும், அதை உங்களால் சமாளிக்க முடியாது என சிம்ரனிடம் கூறி வழியனுப்பி வைத்துள்ளார் விஜய். விஜயின் இறுதிப்படமான தளபதி 69 திரைப்படத்தை யார் இயக்க போகிறார். எந்த நிறுவனம் தயாரிக்க போகிறது தொடர்பான தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. 


Advertisement

Advertisement