• Jan 19 2025

ஜோடியா மிஸ்ஸான நயன் - சிம்பு..! எதையும் கண்டு கொள்ள வேண்டாமென அதிரடி போஸ்ட்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் தான் நயன்தாரா. இவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் பயணித்து வருகின்றார். மலையாள  நடிகையான இவருக்கு தமிழில் ஏராளமான வரவேற்பு காணப்படுகின்றது.

தமிழ் சினிமாவில் ஐயா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நயன்தாரா. இவர் நடித்த முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்ததோடு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின்பு விஜய், சூர்யா, அஜித், ரஜினிகாந்த் என்று முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

இதற்கு இடையில் பிரபுதேவா, சிம்பு, உதயநிதி என இவர்களுடன் காதல் வலையிலும் சிக்கினார். ஆனாலும் அதிலிருந்து விலகி அதற்குப் பிறகு பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனை  6 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

தனது குடும்பத்தை சிறப்பாக கவனித்து வரும் நயன்தாரா தனது கெரியரிலும், பிசினஸ்லும் அதிக  கவனத்தை காட்டுகின்றார். அதேபோல இவருடைய கணவரும் நயன்தாராவின் சினிமா துறைக்கு மட்டும் இல்லாமல் பிசினஸ்க்கு உதவியாகவும் பக்க பலமாக இருந்து வருகின்றார்.


இந்த நிலையில், தற்போது நடிகர் சிம்பு மற்றும் நயன்தாராவின் எக்ஸ் தல பக்கங்கள் ஹெக் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது எக்ஸ் தல பக்கம் ஹெக்  செய்யப்பட்டதாக நயன்தாரா பதிவிட்டு உள்ளார்.

அத்துடன் தனது எக்ஸ் தல பக்கத்தில் வினோதமான பதிவுகள் வெளியானால் யாரும் கண்டு கொள்ள வேண்டாம் என நயன்தாரா தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement