• Sep 18 2024

சுகந்திர தினத்தன்று போட்டி போட்டு வெளியான படங்களின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?

Aathira / 5 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படங்கள் தான் விக்ரம் நடித்த தங்கலான், அருள்நிதி நடித்த டிமாண்டி காலனி 2 ,கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை. 

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பலரின் கடும் முயற்சிகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் தான் தங்கலான். இந்த படம் வெளியாவதற்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கு காரணம் சியான் விக்ரம் இந்த படத்திலும் உடல் இளகி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு இதில் நடித்திருந்தார். இதன் காரணமாகவே தங்கலான்  திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு காணப்பட்டது. வசூல் ரீதியாகவும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது.


அதேபோல அருள்நிதி நடித்த டிமான்டி காலனி 2 திரைப்படமும் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் வெளியானது. இதில் முதலாவது பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு போலவே இரண்டாவது பாகமும் மிகப்பெரிய வரவேற்பிலும் வசூல் ரீதியாகவும் மக்களின் ஆதரவை பெற்றிருந்தது.


ஆனாலும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரகு தாத்தா திரைப்படம் போதிய வரவேற்பு பெறவில்லை. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மோசமான நிலையிலேயே காணப்பட்டது.


இதை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய லாபத்தை பெற்றுள்ளது. அத்துடன் இந்த படம் எமோஷனல் ரீதியாகவும் ரசிகர்களை பாதித்துள்ளது.


இந்த நிலையில், இந்த படங்கள் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி தங்கலான் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 20-ம் தேதி நெட்பிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. வாழை திரைப்படம் 27ஆம் தேதி ஹாட்ஸ்டார் தளத்திலும், டிமான்டி காலனி 2 திரைப்படம் 27ஆம் தேதி ஜீ தளத்திலும், ரகு தாத்தா திரைப்படம் செப்டம்பர் 13 ஆம் தேதி ஜீ தளத்திலும் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement