• Sep 15 2025

நடிகர் கருணாகரன் வீட்டில் இடம்பெற்ற திடீர் மரணம்... அதிர்ச்சியில் தமிழ்த் திரையுலகினர்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக காணப்படுபவர் தான் கருணாகரன். இவர் பல துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு புகழைத் தேடித் தந்த திரைப்படம் சூது கவ்வும். 

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து யாமிருக்க பயமேன், ஜிகர்தண்டா, நேற்று இன்று நாளை, ஹலோ நான் பேய் பேசுறேன், கோ 2, ஒரு நாள் கூத்து, தொடரி என அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து பிரபலமானார்.

இவர் சினிமாவிற்கு வந்த ஒரு சில குறுகிய காலத்திலேயே 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். கடந்த ஆண்டில் மட்டுமே இவர் நடித்த ஆறு படங்கள் வெளியானதாம்.


இந்த நிலையில், நடிகர் கருணாகரனின் தந்தையும் கேபினட் செயலக சிறப்பு பிரிவினரின் ஓய்வு பெற்ற அதிகாரியுமான காளிதாஸ் உடல் நலக்குறைவு காரணமாக இன்றைய தினம் உயிரிழந்து உள்ளார். இந்த சம்பவம் பலருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் கருணாகரனின் அப்பாவான காளிதாஸ் இறக்கும்போது அவருக்கு வயது 77. அவரின் இறுதிச்சடங்கு இன்று மாலை 3 மணி அளவில் பெசன்ட் நகர் நடைபெற உள்ளது. தற்போது இவருடைய மறைவிற்கு பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement