• Sep 19 2024

தனது பின்னழகை இன்சூரன்ஸ் செய்த பிரபல மாடல் அழகி- ஷாக்கான ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பொதுவாக நடிகைகள் மற்றும் மாடல்கள் அழகிகள் தங்களது உடல் அழகில், அளவுகளில் மிகவும் அக்கறை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. தங்களது ரசிகர்களின் விருப்பத்திற்குரிய உடல்வாகை அவர்கள் வைத்திருப்பதே அவர்களின் மார்க்கெட்டை நீடிக்க வைத்துள்ளது.

அந்த வகையில் தற்போது பல நடிகைகள், மாடல்கள் அழகிகள் தங்களது உடலைக் கட்டுக் கோப்பாக வைக்க ஜிம் உள்ளிட்டவை சிறப்பான விடயங்களில் தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர். அவர்கள் செய்யும் வொர்க் அவுட் வீடியோக்களை அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வீடியோக்களாகவும் புகைப்படங்களாகவும் அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இதனிடையே, சிலர் தங்களது உடலில் தங்களுக்கு பிடித்தமான பகுதிகளை இன்சூரன்ஸ் செய்வதும் உலகத்தில் வாடிக்கையாக நடந்து வருகிறது. அந்த வகையில் சிலர் தங்களது 6வது விரல், நீண்ட தலைமுடி உள்ளிட்டவற்றை இன்சூரன்ஸ் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் போர்ச்சுகலை சேர்ந்த பிரபல மாடல் அழகி லரிசா மெக்சிமோனா தனது உடலின் பின்பகுதியை இன்சூரன்ஸ் செய்துள்ளார். அதுவும் எவ்வளவு தொகைக்கு தெரியுமா 74 லட்சம் ரூபாய்க்கு அவர் இன்சூரன்ஸ் செய்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள லரிசா, தன்னுடைய உடலில் மிகவும் முக்கியமான பாகம் தனது பின்பகுதி என்று கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே தன்னுடைய பின்பகுதியை இன்சூரன்ஸ் செய்துள்ளதாகவும், அதை தனது சொத்தாக தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். மாடல்களுக்கு பின்னழகு முக்கியம்தான், ஆனால் அதற்காக இன்சூரன்ஸ் அதுவும் 74 லட்சம் ரூபாய்க்கு எல்லாம் கொஞ்சம் ஓவர்தான் என ரசிகர்கள் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement