• Sep 18 2024

கிராமத்து வாசனையில் அரசியல் கலந்த மண்வாசனை...! நந்தன் படத்தின் டிரெய்லர் வெளியானது!

Aathira / 4 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் காணப்படுபவர் தான் சசிகுமார். இவர் சுப்ரமணியபுரம் என்ற படத்தின் ஊடாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். முதலாவது படமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து குட்டி புலி, நாடோடிகள், சுந்தர பாண்டியன் என நல்ல படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தார். இதனால் அவருடைய படங்கள் என்றாலே தனிக் கவனம் பெற்று வருகின்றது.

சமீபத்தில் வெளியான கருடன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதற்கு இடையில் இவர் சில ஆண்டுகளுக்கு முன் நடித்த நந்தன் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.


உடன்பிறப்பே படத்தை இயக்கிய ரா.சரவணன் இயக்கியுள்ளார். சசிகுமார் இதுவரை நடித்திராத முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நந்தன் படத்தில் நடித்துள்ளார். இதனால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே காணப்படுகின்றது.

இந்த நிலையில், நந்தன் படத்தின் டிரெய்லரும் வெளியாகி நல்ல வர வேற்பை பெற்றுள்ளது. இதனை சசிகுமார் தனது எக்ஸ் தல  பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே 'நந்தன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'எக்கி எக்கி பாக்குறான்' என்ற பாடல் வெளியானது. தற்போது டிரெய்லரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெறுள்ளது.


Advertisement

Advertisement