• May 19 2024

இரு பெரும் ஹீரோக்களுக்கு வில்லனாகும் நடிகர் விஜய் சேதுபதி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்று பலராலும் அறியப்பட்டவர். நடிகராகவும், தயாரிப்பாளராகவும்,பாடலாசிரியராகவும் சினிமாவில் கலக்கி வருகிறார்.

எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கும் தன்மை கொண்டவர் நடிகர் விஜய் சேதுபதி. நடிகராகவும்,வில்லனாகவும் மற்றும் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகின்றார்.

அந்தவகையில்,விஜய் சேதுபதி ஏற்கனவே விக்ரம் வேதா, ராஜனிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்து இருந்தார். சமீபத்தில் உலகநாயகன் கமலா ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் மாஸ் வில்லனாக மிரட்டியுள்ளார்.அவரது வில்லன் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

விஜய் சேதுபதியிடம் "கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவே நடிக்கிறீர்களே? என்று கேள்வி எழுப்பிய போது "இமேஜ் பற்றி நான் கவலைப்படவில்லை எனக்கு வில்லன் வேடம் பிடித்திருக்கிறது" அதனால் நடிக்கிறேன் என்றார் இந்நிலையில் மேலும் 2 படங்களில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு வாய்ப்புகள் வந்துள்ளன. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் "ஜவான்" படத்திலும் அல்லு அர்ஜுன் நடிப்பில் தயாராகும் புஷ்பா 2 பாகத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement