• Oct 13 2024

இந்திய கிரிக்கெட் வீரருடன் விமானத்தில் நடிகை ராதிகா... வைரலாகும் புகைப்படம் இதோ...

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

சீனியர் நடிகை ராதிகா, இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவரான விராட் கோலியை விமானப்பயணத்தில் சந்தித்துள்ளார். அது பற்றி, "லட்சக்கணக்கான மக்களால் விரும்பப்படும் சாதனையாளர் விராட்கோலியுடன் லண்டனிலிருந்து சென்னைக்கு வந்த விமானப் பயணத்தில் சந்தித்ததில் மகிழ்ச்சி. 


அவர் இங்கு விளையாட வருகிறார். மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். செல்பிக்கு நன்றி, எனக் குறிப்பிட்டுள்ளார். ராதிகாவுடன் விராட் கோலி எடுத்த செல்பி புகைப்படத்தையும் ராதிகா பகிர்ந்துள்ளார். இந்தியாவுக்கு வந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று டி20 போட்டிகளை விளையாட உள்ளது வங்கதேச அணி. 


முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் செப்டம்பர் 19ம் தேதி ஆரம்பமாகி 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்காக லண்டனில் ஓய்வில் இருந்த விராட் கோலி அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த போது ராதிகாவுடனான சந்திப்பு நடந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 


Advertisement