• May 19 2024

திருமணம் முடிந்த கையோடு ஸ்ராட் மியூசிக் அஜய் கிருஷ்ணா எடுத்த திடீர் முடிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் பொழுதுபோக்கான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதில் விஜய் டிவியில் முதலிடம் வகிக்கின்றது. அந்த வகையில் இதில் பிக்பாஸ், ஸ்ராட் மியூசிக், சூப்பர் சிங்கர் ,கலக்கப்போவது யாரு ,குக்வித் கோமாளி, மிஸ்டன் அன்ட் மிஸ் இஸ் சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றது.

அந்த வகையில் இதில் ரசிகர்களைக் கவர்ந்த ஷோ தான் மிஸ்டன் அன்ட் மிஸ் இஸ் சின்னத்திரை. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது நான்காவது சீசன் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியை மா கா பா ஆனந்துடன் நிஷாவும் தொகுத்து வழங்கி வருகின்றார்.

மேலும் நடுவர்களாக நீயா நானா புகழ் நடிகை தேவ தர்ஷினி ஆகியோர் இருந்து வருகின்றனர். சின்னத்திரையில் வலம் வரும் நட்சத்திரங்கள் தமது கணவன் மனைவியுடன் இணைந்து போட்டியிடுவதாகவே இந்த ஷோ அமைந்துள்ளது.

அந்த வகையில் கடந்த வாரம் சில போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் பங்குபற்றுவோரின் விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த வாரத்திற்கான இறுதிப் போடியாளர்களாக மதன் ரேஷ்மா & ஸ்ராட் மியூசிக் அஜய்கிருஷ்ணா ஜெசி ஆகியோர் தெரிவாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement