• Oct 13 2024

படித்த பெண்களை கட்டிலில் அடக்கிப்பார்ப்பதும் ஒரு திரில்...?? சுசித்ரா கிளப்பிய புது சர்ச்சை

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. ஆனால் தற்போது சர்ச்சைகளுக்கு பெயர் போன ஒருவராக காணப்படுகின்றார். இவர் சொல்லும் ஒவ்வொரு விஷயங்களும் தமிழ்  திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

2017 ஆம் ஆண்டு சுச்சி லீக்ஸ் என்ற தலைப்பில் நடிகர் தனுஷ், திரிஷா, அனிருத், அமலாபால், ஆண்ட்ரியா என பலரது சர்ச்சைக்குரிய போட்டோக்கள் வெளியிட்டு தமிழ் சினிமாவையே உலுக்கி இருந்தார். ஆனாலும் அதனை தனது கணவர் தான் செய்தார் என்றும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சில காலம் தலைமறைவாக இருந்த சுசித்ரா மீண்டும் தற்போது பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்லி வருகின்றார். அதிலும் தனது  முன்னாள் கணவர் கார்த்திக் குமாரும் தனுஷும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று மிகப்பெரிய குண்டை தூக்கி போட்டிருந்தார். 

இந்த நிலையில், பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த சுசித்ரா மீண்டும் அதிரடியான பல விஷயங்களை தெரிவித்துள்ளார்.


அதாவது பெண்களை படுக்கைக்கு அழைப்பது சினிமாவில் மட்டும் இல்லாமல் பல துறைகளிலும் காணப்படுகின்றது. நான் ஐடி கம்பெனியில் வேலை பார்த்தபோது ஒருத்தர் என்னை எப்போதும் தவறாக பார்ப்பார். ஒருநாள்  பர்த்டே  பார்ட்டி என்று வீட்டுக்கு அழைத்தார். ஆபிசில் இருந்து ஈல்லாரும் சென்றதால் நானும் வேறு வழி இல்லாமல் சென்றேன். அப்போது அவர் நன்றாக குடித்துவிட்டு எனது கையை பிடித்து தவறாக நடக்க முயற்சித்தார்.

நானும் சரி வா என்று அவரை அழைத்து ரூமில் உட்கார வைத்து வெளி பக்கமாக கதவை பூட்டிவிட்டு ஆட்டோவை பிடித்து வீட்டுக்கு சென்று விட்டேன். இனிமேல் அந்த ஆபீசில் வேலை செய்ய முடியாது என்று எனக்கு தெரியும். இதனால் வேலையை ரிசைன் செய்து விட்டு சென்னை வந்து விட்டேன். இப்படித்தான் பல இடத்தில் ஆண்கள் இருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் படித்த பெண்கள் என்றால், ஆண்களுக்கு ரொம்ப பிடிக்கும். அவர்களை கட்டில் அடக்கிபார்ப்பது, அவர்களுக்கு ஒரு த்ரில் என்று பாடகி சுசித்ரா பலவற்றை ஓபனாக பேசி உள்ளார்.

இதேவேளை நடிகை சௌமியா தமிழ் இயக்குனர் ஒருவரால் அனுபவித்த கொடுமை பற்றியும் இப்போது பேசி உள்ளார் சுசித்ரா.

Advertisement