• Sep 18 2024

தளபதியின் கடைசி படத்திற்கான அறிவிப்பு..? ஏக்கத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்

Aathira / 4 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் இளைய தளபதி விஜய் தான். இவரது நடிப்பில் தற்போது வெளியான கோட்  படத்திற்கு சுமார் 200 கோடி வரை சம்பளம் பெற்று இருந்தார்.

இளையதளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியும் ஆரம்பித்துள்ளார். இவர் அரசியலுக்குள் நுழைந்தது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் திரைப் பிரபலங்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவருடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே தற்போது இவர் அரசியலுக்குள் நுழைந்துள்ளார். தற்போதும்  பல கோடிக்கணக்கில் செலவழித்து, பல கோடிக்கணக்கான சம்பளம் கொடுத்து அவரை வைத்து படம் எடுப்பதற்கு பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ரெடியாக உள்ளார்கள்.

ஆனாலும் இளைய தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கிய கோட் திரைப்படத்திற்கு பிறகு தனது 69 ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து முற்றாக ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இது தமிழ் சினிமாவுக்கு அதிர்ச்சியாக காணப்பட்டது.


இந்த நிலையில், இளைய தளபதி விஜய் ஹச் வினோத் இயக்கத்தில் 69 ஆவது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு ஹீரோயினாக பூஜா ஹெக்டே தெரிவாகியுள்ளதாக பேசப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதேபோல இந்த படத்தில் வில்லன் யாரு? இசையமைப்பாளர் யாரு என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement