• Sep 18 2024

ரஜினிகாந்தின் ஒட்டுமொத்த கலெக்சனையும் சுக்குநூறாக்கிய விஜய்யின் வெற்றி! பிரபல தயாரிப்பாளர் அதிரடி

Aathira / 4 days ago

Advertisement

Listen News!

சர்வதேச அளவில் தற்போது வசூலை வாரி குவித்து வரும் திரைப்படம் தான் கோட். இந்த படத்தில் இளையதளபதி விஜய் நடித்திருந்தார். இதனை வெங்கட் பிரபு இயக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். தற்போது கோட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகின்றது.

இந்தியாவில் மட்டும் இல்லாமல் கேரளா, ரஷ்யா, தாய்லாந்து என கிட்டத்தட்ட ஆறுக்கு மேற்பட்ட இடங்களில் கோட் படத்தின் சூட்டிங் நடைபெற்றது. மேலும் இந்த படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், லைலா, சினேகா, மோகன், வைபவ், பிரேம்ஜி, ஜோகி பாபு உட்பட பலர் நடித்திருந்தார்கள். இதன் காரணமாகவே இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் காணப்பட்டது.

இந்த படத்தில் மெயின் வில்லன் மோகன் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் கதாநாயகனாகவும் வில்லனாகவும் விஜய் தான் இந்த படத்தில் மிரட்டி இருந்தார். ஏகப்பட்ட டெக்னாலஜிகள் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.


கோட் படத்தின் ஆரம்பத்திலேயே விஜயகாந்தை காட்டியது விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் விஜயகாந்தின் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தி இருந்தது. அது போல சின்ன சின்ன கண்கள்  பாடலின் ஊடாக சமீபத்தில் உயிரிழந்த பவதாரணியின் குரலையும் மீண்டும் உயிரிப்பித்து இருந்தார்கள்.

இந்த நிலையில், கோட் படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே 126 கோடி ஆனால் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு கலெக்ஷனே 120 கோடி ரூபாய் தான் என்று கூறியுள்ளார் இயக்குனர் தனஞ்செழியன்.

அதாவது பேட்ட படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் முதல் நாளிலேயே கோட் படம் முறையடித்துள்ளது. அதற்கு காரணம் விஜயின் வெற்றிதான் என்று கூறியுள்ளார். இதனை ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தல பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Advertisement

Advertisement