• Oct 08 2024

பிக் பாஸ் சீசன் 8 பற்றி மாயா கிளப்பிய சர்ச்சை.. ஆரம்பமே அதிரடியா?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை இதுவரையில் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், தற்போது அதில் இருந்து அவர் விலகி விட்டார். இதன் காரணத்தினால் புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி களமிறங்கி உள்ளார். 

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு முதன் முதலாக மக்களால் வழங்கப்பட்ட பிக் பாஸ் ப்ரோமோ வெளியானது. அதில் பொதுமக்கள் விஜய் சேதுபதிக்கு அட்வைஸ் பண்ணிய காட்சிகள் பிக் பாஸ் பற்றிய கருத்துக்கள் பரவலாக காட்டப்பட்டது.

இம்முறை கடந்த சீசன் போலவே இரண்டு பிக் பாஸ் வீடுகள்  இருக்குதா அல்லது ஒரே வீடு தான் இடம்பெருமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றார்கள். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் பற்றி பல பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் அதிகார்வ பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக பங்கு பற்றிய மாயா தனது அனுபவத்தை கூறியுள்ளார்.


அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியின்  எட்டாவது சீசன் தொடர்பில் தன்னுடைய ஆர்வத்தை தெரிவித்த மாயா, பிக் பாஸ் சீக்ரெட் மட்டும் அப்படியே இருக்கும் என கூறியுள்ளார். 

மேலும் இதில் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்பதை கணித்துக்கொள்ள முடியாது. பெண்களை முக்கியமாக பயமுறுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement