• Jan 18 2025

வணங்கான் படத்தில் பிரச்சினையா? அல்லது "வணங்கான்" பெயரில் பிரச்சினையா?

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

வணங்கான் படத்தில் சூர்யா, அருண் விஜய், கிருத்தி ஷெட்டி, ரோஷ்னி பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 'வணங்கான்' இத்தலைப்பை தான் பதிவு செய்து வைத்துள்ளேன் என்று கூறி ஆரஞ்ச் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் தலைப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


வழக்கு விசாரணைக்கு வந்தபோது சுரேஷ் காமாட்சி, பாலா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 2022ம் ஆண்டு முதல் இத்தலைப்பில் படம் உருவாகி வருகிறது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பணம் பறிக்கும் நோக்கத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக குற்றம் சாட்டினார். 


வழக்கை விசாரித்த நீதிபதி, தலைப்புக்கு பதிப்புரிமை சட்டம் பொருந்தாது என்று வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து சரவணன் மேல்முறையீடு செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள்  சுந்தர் சக்திவேல் ஆகியோர் தென்னிந்திய சினிமா மற்றும் டிவி தயாரிப்பாளர்கள் கில்டுக்கு செப்டம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement