• Oct 13 2024

40 நாட்கள் சொகுசு கப்பலில் பயணம்.. நெப்போலியன் மகனின் கல்யாணத்தில் இப்படியும் நடக்குதா?

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிறந்த கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்து பெயர் போனவர்தான் நெப்போலியன். இவர் கிராமத்து கதையம்சம் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக காணப்பட்டார். தற்போது இவருடைய மூத்த மகன் தனுஷுக்கு ஜப்பானில் திருமணம் நடைபெற உள்ளது.

புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் மூலம் சினிமாவில் என்ட்ரி  கொடுத்தவர் தான் நடிகர் நெப்போலியன். இவர் ஹீரோவாக, வில்லனாக, குணச்சித்திர கேரக்டரில் கூட சிறப்பாக நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான கிழக்கு சீமையிலேயே, எட்டுப்பட்டி ராசா, சீவலப்பேரி பாண்டி, எஜமான் போன்ற படங்கள் இன்று வரை ரசிகர்களுக்கு நெருக்கமான படங்களாகவே காணப்படுகின்றது.

தமிழில் இதுவரையில் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடித்து உள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் தனுஷ் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்காக ஏகப்பட்ட சிகிச்சைகளை செய்த நெப்போலியன், ஒரு கட்டத்தில் சினிமா மற்றும் அரசியலில் இருந்து விலகி தனது மகனுக்காக அமெரிக்காவிலேயே செட்டிலானார்.


தற்போது தனுசுக்கு 25 வயது ஆன நிலையில், அவருக்கு திருமணம் பண்ணி வைப்பதற்காக தனது உறவுக்கார பெண்ணையே பேசி நிச்சயதார்த்தம் செய்துள்ளார். தற்போது இவர்களுடைய திருமணம் ஜப்பானில் நடைபெற உள்ளதால் எல்லாரும் ஜப்பானுக்கு சென்றுள்ளார்கள்.

இந்த நிலையில், இது தொடர்பில் பேசிய  பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், நவம்பர் நடக்கவுள்ள திருமணத்திற்காக நெப்போலியன் குடும்பம் செப்டம்பர் முதலாம் திகதியே பயணத்தை தொடங்கி உள்ளார்கள்.  அரசு பயணமாக அமெரிக்க வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அவரை வரவேற்றார்  நெப்போலியன். அதன்பின் அவரின் குடும்பம் சொகுசு கப்பலில் பயணத்தை தொடங்கினார்கள்

சுமார் 40 நாட்கள் ஆகும் என்பதால் இப்போதே திருமண பயணத்தை அவரது குடும்பத்தினர் தொடங்கியுள்ளார்கள். இதற்காக மணமகள் அக்ஷயா தமிழகத்தில் இருந்து ஜப்பான் செல்ல உள்ளார். இவர்களின் திருமணத்தை பலரும் கொண்டாடி வருவதோடு எந்த ஒரு அப்பாவும் செய்யாததை நெப்போலியன் தனது மகன் தனுசுக்காக செய்துள்ளார் என்றும் பயில்வான்  கூறியுள்ளார்.

Advertisement