• Oct 04 2024

வேட்டையன் "மனசிலாயோ" பாடல் ரிலீஸ்... எப்போது தெரியுமா?

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

லைகா நிறுவனம் தயாரிக்கும் வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து பல ஆண்டுகளுக்கு பின் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். மேலும் ராணா, பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடல் குறித்து அறிவிப்பை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. வேட்டையன் படத்தின் முதல் பாடல் "மனசிலாயோ" வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் இந்த பாடல் வெளியாகும் என குறிப்புட்டுள்ளனர்.


ஜெயிலர் படத்தில் Hukum பாடலை எழுதிய சூப்பர் சுப்பு தான் வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள "மனசிலாயோ" பாடலுக்கும் வரிகள் எழுதியுள்ளாராம். இதன் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். 


Advertisement

Advertisement