ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகும் தேவரா படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
தற்போது, ஜுனியர் என்டிஆர் தனது 30வது படத்தில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குநர் கொரடால சிவா இயக்கிவரும் இந்தப் படத்துக்கு 'தேவரா -1' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜான்வி கபூர், சயிஃப் அலி கான், நந்தமுரி கல்யான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படம் வருகிற செப்.27 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் வரும் செப்டெம்பர் 10 வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இந்த டிரைலர் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகவிருக்கிறது.

Listen News!