• Dec 21 2024

மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சூப்பர் ஸ்டாருக்கு என்ன பிரச்சினை தெரியுமா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படம் தான் வேட்டையன். இந்த திரைப்படம் பத்தாம் தேதி ரிலீசாக உள்ளது. மேலும் நாளைய தினம் இந்த படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு காணப்படுகின்றார்கள்.

ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக ஜெயிலர், லால் சலாம் ஆகிய இரண்டு படங்கள் வெளியானது. அதில் ஜெயிலில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. ஆனால் லால் சலாம் படம் தோல்வியை அடைந்தது. இந்த படத்தை அவருடைய மகள் ஐஸ்வர்யா இயக்கியிருந்தார்.

ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே த.செ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் ரஜினி. இந்த படத்தில் அவருடன் அமிர்தா பச்சன், பகத் பாஸில், ராணா ரகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன்  ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது. இதன்போது படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி டீசர் வெளியாகவில்லை. வழக்கமான கமர்சியல் படம் போல தான் இருக்கின்றது. அதில் முக்கியமாக ரஜினியின் கெட்டப், மேனரிசம் என அனைத்தும் ஜெயிலர் படத்தை நினைவுபடுத்துவதாக பல விமர்சனங்கள் இருந்தன.


இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிறு தொடர்பான பிரச்சனை காரணமாகவே அவர் அனுமதிக்கப்பட்டதாகவும் அங்கு அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனாலும் அவருடைய உடல்நிலை சீராக இருக்கின்றது என்றும் வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் இதனால் யாரும் பயப்படத் தேவையில்லை என்று மருத்துவமனை நிர்வாகமும் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement