• Dec 06 2024

அடையாறு சிக்னலில் ஆக்ரோஷமாக நடந்த சம்பவம்.. பிரபல நடிகை வெளியிட்ட பரபரப்பு

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

2015 ஆம் ஆண்டு அமீரகத்தில் நடைபெற்ற 'மிஸ் இந்தியா யுஎஇ' போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர் தான் நடிகை நிவேதா. அதன் பின்பு நடைபெற்ற 'மிஸ் இந்தியா வேர்ல்ட் வைட் 2015' போட்டிகளிலும் பங்கேற்று ஐந்தாவது இடத்தை பிடித்தார்.

ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை ஆரம்பித்தார். இந்த படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக், விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன், பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தனர்.

இறுதியாக தமிழில் கடந்த ஆண்டு வெளியான Boo என்கின்ற படம் படத்தில் முக்கிய கேரக்டரில் இவர் நடித்திருந்தார். சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

d_i_a

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தான் அடையாறு சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 8 வயது சிறுவன் தன்னிடம் பணம் கேட்டதாகவும் நான் பணம் தர முடியாது என்ற கூறிய நிலையில், அந்தப் பையன் ஒரு புத்தகத்தை கொடுத்து அதற்கு 100 ரூபாய் கேட்டதாகவும் தான் 100 ரூபாய் எடுக்க முயன்ற போது எனக்கு 500 ரூபாய் தாருங்கள் என்று அந்தப் பையன் கேட்டதாகவும் நிவேதா கூறி உள்ளார்.


மேலும் அந்தப் பையன் 500 ரூபாய் கேட்ட நிலையில், உடனே அவன் கையில் அந்த புத்தகத்தை மீண்டும் கொடுத்துவிட்டு நான் கொடுத்த 100 ரூபாயை சிறுவன் கையில் இருந்து எடுத்துள்ளார் நிவேதா. இதன்போது அந்த சிறுவன் புத்தகத்தை வாகனத்திற்குள் வீசிவிட்டு அவருடைய கையில் இருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் இதுபோல ஆக்ரோஷமாக பிச்சை எடுப்பது இங்கு அனைத்து இடங்களிலும் நடக்கின்றதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement