• Jan 18 2025

எதிர்நீச்சல் இயக்குனரின் புதிய முயற்சி.. 'சேர் டிக்கெட்டில்' என்ன சுவாரஸ்யம் தெரியுமா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் தான் திருச்செல்வம். அதன் பின்பு சன் டிவியில் மிகப்பெரிய ரசிகர்களை கவர்ந்த எதிர்நீச்சல் சீரியலையும் இயக்கியிருந்தார்.

எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்கும் நடவடிக்கைகளில் திருச்செல்வம் ஈடுபட்டு வருகின்றார். எதிர்நீச்சல் சீரியல் அதிக அளவில் வரவேற்பை பெற்ற போதும் பல விமர்சனங்களையும் பெற்றுக்கொண்டது.

d_i_a

இந்த நிலையில், புதிய youtube சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார் இயக்குனர் திருச்செல்வம். அதற்கு சேர் டிக்கெட் என்று பெயரிட்டுள்ளார். அதில் தனது அனுபவங்களை பகிர உள்ளதாக வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.


மேலும் வித்தியாசமான கருத்துக்கள் அடங்கிய காணொளிகள், பிரபலங்களுடன் நேர்காணல், குறுந்தொடர்கள் என அடுத்தடுத்து புதிய முயற்சிகளை இந்த youtube பக்கத்தில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கோலங்கள் தொடருக்காக தமிழக அரசின் சின்னத்திரை விருதை  பெற்றுள்ளார். தொடர்ந்து மூன்று பிரிவுகளில் மாதவி தொடருக்காக மயிலாப்பூர் அகாடமி விருதுகளையும் பெற்றுள்ளார். அதேபோல எதிர்நீச்சல் சீரியலுக்கு சிறந்த இயக்குனர், வசனம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் சன் குடும்ப விருதுகளை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement