• Nov 21 2025

ரெட்காட் கொடுக்கப்பட்டு வெளியேறிய பிரதீப் பாடிய முதல் பாடல் என்ன தெரியுமா?- மனுஷன் செம ஜாலியாக இருக்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க சண்டைகளுக்கு பஞ்சமில்லை என்று தான் சொல்ல வேண்டும். கடந்த வாரம் பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய விவகாரம் தான் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இடையேயான இந்த சண்டைக்கு முக்கிய காரணம். 

இதில் மாயா, பூர்ணிமா, ஐஷூ, ஜோவிகா ஆகியோர் ஓர் அணியாக சேர்ந்துகொண்டு பிரதீப்புக்கு ஆதரவு தெரிவித்த விசித்ரா மற்றும் அர்ச்சனாவை திட்டித்தீர்த்தனர்.ஆனால் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்குகளை வைத்து உஷாரான மாயாவின் புல்லி கேங், தற்போதே கமலிடம் என்ன கதை சொல்லலாம் என்று விவாதிக்க தொடங்கி உள்ளது.


இன்று மாயாவின் புல்லி கேங்கிற்கு கமல் செம்ம டோஸ் கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி பிரதீப் ஆண்டனியும் இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்குள் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இப்படியான நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய பிரதீப் காதல் தேசத்தில் இடம் பெறும் என்னைக் காணவில்லையே என்னும் பாடலைப் பாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement