• Jan 18 2025

நடிகை ப்ரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போடுவதற்கு இத்தனை கோடி வாங்குகின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் நடிப்பில் வெளியான தமிழன் என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் ப்ரியங்கா சோப்ரா.படம் சுமாரான ஹிட் என்றாலும் உலக அழகி நடித்திருக்கிறார் என்ற பெரும் விளம்பரம் அந்தப் படத்துக்கு ப்ரியங்கா சோப்ரா மூலம் கிடைத்தது.

இதன் பின்னர் தமிழிலிருந்து விலகிய இவர் ஹீரோ - லவ் ஸ்டோரி ஆஃப் தி ஸ்பை என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி ஆனார். தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். 


மேலும் ஜோனாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் தற்போது சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார்.இந்நிலையில் ப்ரியங்கா சோப்ரா குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது பிரபலமானவர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் ஏதேனும் ஒரு ப்ராடெக்ட்டின் விளம்பரங்களை பதிவிடுவது உண்டு.


 அதற்காக அவர்கள் பணம் பெறுவதும் உண்டு. இந்த சூழலில் ப்ரியங்கா சோப்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஏதேனும் பிராண்டின் விளம்பரம் தொடர்பாக ஒரு போஸ்ட் போட மூன்று கோடி ரூபாய்வரை வாங்குவதாக கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஆச்சரியத்தின் உச்சத்துக்கு சென்றிருக்கின்றனர்.


Advertisement

Advertisement