• Dec 03 2024

பிரமாண்டமாக நடந்த நடிகர் காளிதாஸ் ஜெயராமின் நிச்சயதார்த்த விழா- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


மலையாள நடிகர் ஜெயராம், தமிழில் ஏராளமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் கூட ஆழ்வார்க்கடியான் நம்பியாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். 

இவரது மகனான காளிதாஸும் சினிமாவில் இளம் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் காளிதாஸ்.


தமிழிலும் இவர் நடிப்பில் ஒருபக்க கதை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்கள் வெளியாகின. இதுதவிர லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் நடிகர் கமல்ஹாசனின் மகனாக நடித்திருந்தார். 

 குறிப்பாக பாவக்கதைகள் ஆந்தாலஜியில் சுதா கொங்கரா இயக்கிய குறும்படத்தில் காளிதாஸ் திருநங்கையாக நடித்து பாராட்டுக்களை பெற்றார்.இவர் அழகி தாரிணி காளிங்கராயர் என்பவரை காதலிப்பதாக இதற்கு முன் அறிவித்துவிட்டார்.

இந்த நிலையில் காளிதாஸ்-தாரிணி திருமண நிச்சயதார்த்தம் நேற்றைய தினம் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பன வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement