• Feb 22 2025

யாழ் இசை நிகழ்வு குறித்து பாடகர் ஹரிஹரன் வெளியிட்ட பேஸ்புக் பதிவு... என்ன சொன்னார் தெரியுமா?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்வு நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்நிலையில் அந்த பிரமாண்ட நிகழ்வு குறித்து பாடகர் ஹரிஹரன் தனது பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்று 09ஆம் திகதி ஹரிஹரனின் இசை நிகழ்வு மிக பிரமாண்டமாக முற்றவெளி மைதானத்தில் நடைபெற்றது.


இந்த நிகழ்வுக்காக தென்னிந்தியாவில் இருந்து நடிகை ரம்பா,தமன்னா,கலா மாஸ்டர், நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா , நந்தினி, மகா லட்சுமி, ரச்சிதா என பிரபலங்கள் திரண்டு வருகை தந்திருந்தனர்.   


நேற்று இந்த நிகழ்வும் மிக பிரமாண்டமாக அநேககோடி ரசிகர்களின் மத்தியில் நடைபெற்றது. ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியுடன் தென்னிந்திய கலைஞர்களின் நிகழ்வுகளும் ரசிகர்களுக்கு விருந்தளித்தனர். அந்த நிகழ்வின் போது ரசிகர்கள் அதிகரித்ததனால் சில இடையூருகளும் ஏற்பட்டது. அத்தனையும் தாண்டி நிகழ்வு சிறப்பாக நிறைவு பெற்றது.


இந்த நிகழ்வு தொடர்பாக பாடகர் ஹரிஹரன் அவர்கள் தனது facebook பக்கத்தில் " மறக்க முடியாத கச்சேரிக்கு நன்றி யாழ்! உங்கள் அதீத அன்பும் ஆதரவும் இசையின் ஒருங்கிணைக்கும் சக்தியை உண்மையிலேயே வெளிப்படுத்தியது.


ஒன்றாக, நாங்கள் நல்லிணக்கத்தையும் இணைப்பையும் கொண்டாடினோம். இந்த நிகழ்வை ஒழுங்கமைப்பதில் அபார முயற்சி செய்த கலா மாஸ்டர் மற்றும் இந்திரகுமார் பத்மநாதன் அவர்களுக்கு சிறப்பு நன்றி. என குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement