• May 20 2025

ஷாருக்கானுக்குப் பிறகு...அல்லுவோடு சேரும் அட்லிக்கு கிடைத்த அங்கீகாரம்.! என்ன தெரியுமா?

subiththira / 6 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடம் பிடித்திருக்கும் இயக்குநர் அட்லி, தற்போது உலகளாவிய அளவில் பாராட்டுகளையும் புகழையும் சம்பாதித்து வருகின்றார். ‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய அட்லி, கடந்த ஆண்டு பாலிவுட் ஹீரோ ஷாரூக்கானுடன் இணைந்து நடித்த ‘ஜவான்’ திரைப்படத்தின் மூலம், இந்தியா முழுவதும் தனக்கென ஒரு சிறப்பான இடத்தை உறுதி செய்தார்.


அட்லி தனது அடுத்த திரைப்படத்திற்கான திட்டங்களை முடிவெடுத்து வருகின்றார். தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியில் உருவாகவிருக்கும் இந்த படம், தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது, அவரது பன்முகத் திறனுக்கு கௌரவமாக, சத்தியபாமா யூனிவர்சிட்டி அடுத்த மாதம் அவருக்கு Doctorate பட்டத்தினை வழங்கவுள்ளதாக அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனமான சத்தியபாமா யூனிவர்சிட்டி, கல்வி, கலை, சமூக சேவைகள் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் சிறப்பாக பங்களித்தவர்களுக்கு ஆண்டுதோறும் Doctorate விருதுகளை வழங்கி வருகின்றது. 2025ம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில், இயக்குநர் அட்லியின் திரைப்பட சாதனைகள் மற்றும் அவரது கிரியேட்டிவ் புரட்சிக்கு அங்கீகாரமாக இந்த கௌரவம் வழங்கப்படவுள்ளது.


அட்லியின் குடும்பத்தினர், திரை உலக நண்பர்கள் மற்றும் பல்வேறு திரையுலக பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது. தமிழ் திரையுலகத்தில் இருந்து இதுவரை வெகு சிலருக்கே வழங்கப்பட்டுள்ள இத்தகைய கௌரவம், தற்பொழுது அட்லிக்கு கிடைத்தது அனைத்து ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement