• May 20 2025

தல ரேஸுக்குள் இறங்க காரணம் இதுதானா..? அஜித்தே பகிர்ந்த சுவாரஸ்யமான உண்மைகள்..!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் ஸ்டாராகத் திகழ்பவர் நடிகர் அஜித் குமார். தனது எளிமையான நடிப்பு , ஸ்டைல் மற்றும் பேச்சுக்களால் அதிகளவான ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட இவர், தற்பொழுது ரேஸிங், சினிமா, சமூக பங்களிப்பு என பன்முகத் திறமைகளை மக்களுக்கு நிரூபித்து வருகின்றார். மேலும் இந்நடிகர் அண்மையில் இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண் விருதை பெற்றதன் மூலம் மீண்டும் தேசிய அளவிலான கவனத்தைப் பெற்றார்.


அதனையடுத்து, பல வருடங்களுக்குப் பிறகு, அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற நிகழ்வுகளைப் பகிரும் வகையில் மாஷ்பிள் இந்தியா ஊடகத்தின் பேட்டியில் பங்கேற்றிருந்தார். அந்த பேட்டியில், தனது ரேஸிங் வாழ்க்கையின் ஆரம்ப காலம், பெற்றோர் ஒத்துழைப்பு, கல்வியை விட்டதற்கான சூழ்நிலை உள்ளிட்ட பல விடயங்களை மிகவும் திறந்த மனதுடன் பகிர்ந்துள்ளார்.

அஜித் அதன்போது, “நான் முதலில் பைக் ரேஸிங்கை தொடங்கினேன். ஏனெனில் அது மிகவும் மலிவானது. மற்றவைகளை ஒப்பிடும்போது, அதிக செலவில்லாதது.” என்று கூறியிருந்தார். 


இவ்வாறு ஆரம்பித்த அந்த பயணம், இன்று உலகளாவிய ரேஸிங் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் வளர்ந்திருக்கிறது என்பது பெரும் சாதனை. தற்போது அவர் GT4 European Series போன்ற உயர்மட்ட பந்தயங்களில் பங்கேற்று பல சாதனைகளை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நிகழ்ச்சியில் அஜித் தனது பெற்றோர்கள் குறித்து மிகவும் நன்றியுடன் பேசியுள்ளார். அவர்கள் எப்படி தனது வாழ்க்கையில் தெளிவான வழிகாட்டியாளர்களாக இருந்தனர் என்பதையும் பகிர்ந்துள்ளார். அதன்போது, "எனக்கு ஆதரவாக பெற்றோர்கள் இருந்ததற்கு நான் மிகவும் பாக்கியசாலியாகக் கருதுகிறேன். எனது தந்தை இது மிகவும் செலவை உண்டாக்கும் விளையாட்டு. எங்களால் உனக்கு ஆதரவளிக்க முடியாமல் போகலாம். ஆனால், நீ உன் ஸ்பான்ஸர்களைக் கண்டுபிடித்து, அதற்கு ஒரு வழி கண்டால், முன்னேறு..!" எனக் கூறியதாகத் தெரிவித்தார்.


இது ஒரு அப்பாவின் உண்மையான அக்கறையை காட்டும் வார்த்தைகள். நேர்மையும், வெளிப்படைத்தன்மையும் கொண்ட அந்த அறிவுரை, அஜித்தின் வாழ்க்கையின் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.

பல வருடங்களாக எந்த ஒரு நேர்காணல்களிலும் பங்கேற்காத அஜித், தற்போது, வாழ்க்கையைத் தன்னடக்கமாக பகிரும் எண்ணத்தில், பல சுவாரஸ்யமான விவரங்களை தெரிவித்து வருகின்றார். இது, ரசிகர்கள் மட்டுமல்லாமல், வெற்றிக்காக போராடும் இளைஞர்களுக்கும் பெரும் ஊக்கமளிக்கிறது.

Advertisement

Advertisement