• May 20 2025

"டூரிஸ்ட் பாமிலி"படத்தினைப் பாராட்டிய தெலுங்கு இயக்குநர்..!யார் தெரியுமா...!

Roshika / 7 hours ago

Advertisement

Listen News!

"டூரிஸ்ட் பாமிலி" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்தின் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்திருந்தனர். இந்த நிலையில் பல பிரபலங்கள் திரைப்படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் தற்போது இயக்குநர் ராஜமௌலி தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.


மே 1 திரையரங்குகளில் வெளியான "டூரிஸ்ட் பாமிலி" திரைப்படம் ரசிகர்கள்  மத்தியிலும் நடிகர்கள்,நடிகைகள்,இயக்குநர்கள் எனப்பலர் திரைப்படத்தினை பாராட்டி வருகின்றனர். இந்த வாழ்த்துக்கள்  சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. 


அந்த வகையில் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் ராஜமௌலி. இவர் பல வெற்றிப்படங்கள் ரசிகர்களுக்கு தந்துள்ளார். தற்போது"டூரிஸ்ட் பாமிலி" திரைப்படத்தினை பார்த்து பாராட்டி  தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். 


மேலும் அந்த பதிவில் "டூரிஸ்ட் பாமிலி"எனும் அற்புதமான திரைப்படத்தினை பார்த்தேன் மனதினை நெகிழ வைத்துள்ளது. திரைப்படம் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை நகைச்சுவையாகாவும் எமோஷனலாகவும் இருந்தது. 


அதுமட்டுமல்லாமல் அபிஷன் ஜீவிந்தின் மிக சிறந்தாக எழுத்து மற்றும் இயக்கம் அமைந்துள்ளது. சில காலங்களில் மிக சிறந்த திரைப்படத்தினை எமக்கு தந்தமைக்கு நன்றி தெரிவித்தும் ரசிகர்களை இந்த படத்தினை தவற விடாதீர்கள் என்றும் கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.





Advertisement

Advertisement