• Sep 29 2025

துரூவ் விக்ரமின் பிறந்த நாளில் வெளியான டபுள் ட்ரீட்..! என்ன தெரியுமா.?

subiththira / 5 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் வலிமையான இளம் நடிகர்களில் ஒருவர் துரூவ் விக்ரம். தமிழ் சினிமாவில் தனது நேர்த்தியான நடிப்பு, வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யும் அணுகுமுறை என்பவற்றால் இன்று திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார்.


இன்று (செப்டம்பர் 23), துரூவ் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘பைசன் காளமாடன்’ படக்குழுவினர் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம், துரூவ் விக்ரமிற்கு முற்றிலும் புதிய பரிமாணம் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.

'பைசன் காளமாடன்' எனும் இப்படம், கிராமத்து பின்னணியில் அமைந்த, மண்ணின் வாசனையோடு கூடிய, அடக்கமற்ற ஆளுமையுடைய கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டதாக உருவாகி வருகிறது. இந்த படம் துரூவ் விக்ரமிற்கு முற்றிலும் புதிய சாயலை அளிக்கும் ஒரு முயற்சி எனத் தெரிகிறது.


படத்தின் டைட்டிலே ஒரு வித்தியாசத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த திரைப்படத்தில் துரூவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் ரெஜிஷா விஜயன் ஆகியோர் இணைந்துள்ளனர். இரண்டு பேருமே தங்களது குணச்சித்திர நடிப்பால் தென்னிந்திய திரையுலகில் பெரும் பெயரை பெற்று வருகின்றனர்.

அதேபோல், பசுபதி மற்றும் கலையரசன் ஆகியோரும் இப்படத்தில் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் இசை சினிமா ரசிகர்களிடையே ஏற்கனவே ஒரு நல்ல பெயரை பெற்றிருந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Advertisement

Advertisement