• Nov 05 2025

மீண்டும் திரைக்கு வருகிறது ‘அனகோண்டா’..! அதிரடியாக ட்ரெயிலரை வெளியிட்ட படக்குழு.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

1997-ஆம் ஆண்டு வெளியான ‘அனகோண்டா’ திரைப்படம், அதிரடியும் ஆக்‌ஷனும் கலந்த ஒரு அதிசய உயிரின திரைப்படமாக விளங்கியது. வெளியான தருணத்தில் விமர்சகர்களிடமிருந்து பெரிய அளவில் எதிர்மறையான கருத்துகளை பெற்றிருந்தாலும், அந்த படம் உலகளாவிய அளவில் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது. குறிப்பாக, பத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான இந்த திரைப்படம், பல்வேறு நாடுகளின் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.


ஜெனிபர் லோபஸ், ஜான் வாய்ட், ஓவன் வில்ஸன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்த இப்படம், அமேசான் காடுகளில் பரிதாபமான ஒரு பயணமாகும் குழுவின் கதைபோலத் தொடங்கி, கொடிய அனகோண்டா பாம்பு ஒன்றின் தாக்குதலால் எடுக்கப்படும் திருப்பங்களைக் கொண்டிருந்தது. அந்த தருணத்தில், விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பம் பெரிதாக வளர்ச்சியடைந்ததாக இல்லாவிட்டாலும், படம் சஸ்பென்ஸுடன் கூடிய காட்சிகள், இருள்மிக்க சூழ்நிலைகள் மற்றும் பாம்பின் ஆபத்தான தாக்குதல்கள் மூலம் ரசிகர்களிடம் தனித்த இடத்தை பெற்றது.

1997-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல பாகங்கள் எடுக்கப்பட்டன. 2004-ல் ‘Anacondas: The Hunt for the Blood Orchid’ என்ற இரண்டாவது பாகம் வெளியானது. அதன்பிறகு 2008, 2009 மற்றும் 2015-ல் ஒவ்வொரு தொடர்ச்சிப் படங்களும் வெளியானது.


இவை அனைத்தும் பெரியளவில் வெற்றியைப் பெறவில்லை. தற்போது, சோனி பிக்சர்ஸ் நிறுவனம், ‘அனகோண்டா’ பிராண்டை மீண்டும் உயிர்ப்பிக்க முடிவு செய்துள்ளது. புதிய தலைமுறை ரசிகர்களுக்கு இந்த கதையை புதிய வடிவில் கொண்டு வரவேண்டும் என்பதோடு, பழைய ரசிகர்களிடமிருந்தும் மறு கவனம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த புதிய 'அனகோண்டா' படத்தை, இயக்குநர் டாம் கோர்மிகன் இயக்கியுள்ளார். படக்குழு தற்போது இந்தப் படத்தின் அதிகாரபூர்வ டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லரில் மிகுந்த அதிரடிக் காட்சிகள், காட்டுக்குள் பயணிக்கும் குழு, அவர்களைத் தொடரும் மர்மமான நிகழ்வுகள் போன்ற விஷயங்கள் காட்டப்பட்டுள்ளன. அத்துடன் இப்படம் வருகிற டிசம்பர் 25ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement