• Feb 03 2025

அஜித் பாடலுடன் தனது 51 ஆவது பட தலைப்பை கூறிய STR..! என்ன தலைப்பு தெரியுமா..?

Mathumitha / 4 hours ago

Advertisement

Listen News!

இன்று தனது 47 ஆவது பிறந்தநாளை நடிகர் சிலம்பரசன் கொண்டாடி வருகின்றார்.இவரது பிறந்தநாளை முன்னிட்டு இவரது அடுத்தடுத்த படங்கள் குறித்த அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றன.இந்த நிலையில் தற்போது சிம்புவின் 51 ஆவது படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.


இதனை சிம்பு தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.இப் பதிவில் fire குறியீட்டுடன் "காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை…மீறி அவன் பூமி வந்தால்…?" என அஜித் பட பாடலின் வரிகளை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.


இவர் இந்த படத்தில் "oh my kadavule " படத்தை இயக்கிய அஷ்வத் மாரிமுத்துடன் கூட்டணி வைக்கவுள்ளதுடன் இப் படத்திற்கு "god of love " என தலைப்பு வைத்துள்ளனர்.இப் படத்திற்கான படப்பிடிப்பினை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement