எதிர்வரும் 6 ஆம் திகதி அஜித் ,திரிஷா நடிப்பில் வெளியாகவுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனியின் உண்மை முகத்தினை உடைத்துள்ளார்.வலைப்பேச்சு அந்தணன் மகிழ் திருமேனி ஒருமுறை ஆர்யாவின் மீகாமன் திரைப்படத்தில் அவரது தம்பி மற்றும் அவர் நடந்து கொண்ட விடயங்களினை மனக்குமுறல் உடன் கூறியுள்ளார்.
மற்றும் மகிழ் திருமேனியை தனக்கு ஒருவர் "மார்க்கன் " என அறிமுகப்படுத்தியதாக கூறியுள்ளார்.குறித்த சூட்டிங்கில் நடனம் ஆடுவதற்கு வந்த பெண்ணிடம் இயக்குநரின் தம்பி தகாத வார்த்தைகள் பிரயோகித்திருந்தமையினால் அந்த பெண் அவரை மன்னிப்பு கேட்கும் படி கூறியபோது மகிழ் திருமேனி மற்றும் அவரது தம்பி மன்னிப்பு கேட்காமையினால் சூட்டிங்க் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனால் தயாரிப்பாளர் அவரது சம்பளத்தினை குறைத்து கொடுத்துள்ளார்.இதற்கு மகிழ் திருமேனி முழு தொகையினையும் தந்தால் மட்டுமே படம் வெளியிட முடியும் என எச்சரித்து பட வெளியீட்டினை நிறுத்தி வைத்துள்ளதாகவும் இதனால் தயாரிப்பாளர்கள் இவரிடம் உஷாராக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் இந்த வீடியோவில் ஒரு 5 தடவைக்கு மேல் ஏன் அஜித் ரசிகர்கள் மகிழ் திருமேனிக்கு முட்டு கொடுக்க வேண்டிய தேவையில்லை என மிகவும் கோபத்துடன் கூறியுள்ளார்.
Listen News!