அமரன் பட வெற்றியினை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நடிகை சாய்ப்பல்லவி தற்போது நாகா சைத்தன்யாவுடன் நடித்த தண்டேல் பட வேலைகளில் மிகவும் பிஸியாக உள்ளார்.மிகவும் உணர்ச்சி பூர்வமான கதைகளில் நடித்து வரும் இவர் அதிகம் கலாச்சார உடைகளை அணிவது வழக்கமாக கொண்டுள்ளார்.
இவர் அதிக ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதற்கு விரும்புவதில்லை என ஒட்டுமொத்த சினிமா உலகுமே அறிந்த ஒன்று இந்த நிலையில் நடிகை குறித்த நல்ல விடயங்களினை அனிமல் திரைப்பட இயக்குநர் சந்தீப் ரெட்டி கூறியுள்ளார்.
தனது தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி படத்தில் முதலில் சாய் பல்லவி நடிக்க வைக்க விரும்பினேன். ஆனால் எனக்குத் தெரிந்த மலையாள நடிகர்களுக்கான ஒருங்கிணைப்பாளர் ஒருவரிடம் சாய்பல்லவி கொடுத்து கேட்டபோது அவர் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை கூட அணிந்து நடிக்க மாட்டார். அவர் எப்படி ரொமான்டிக் காட்சிகளில் நடிப்பார் என்று கேட்டார். அதன் பிறகு தான் என் படத்தில் அவரை நடிக்க வைக்கும் முடிவை கைவிட்டேன்.
ஆனால் பல ஆண்டுகளாக சாய்பல்லவியை நான் கவனித்து வருகிறேன் அவர் ஒரு நடிகையாக, தன்னுடைய தரத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார். அது சினிமாவில் மிகவும் அரிய விஷயம் என கூறியுள்ளார்.
Listen News!