• Jan 18 2025

அன்னபூரணி படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?- வெளியாகிய சென்சார் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்த இவர் தற்பொழுது ஜவான் திரைப்படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவிலும் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.இப்படம் 1000 கோடி ரூபாய் சாதனையையும் படைத்துள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக நயன்தாரா லீட் கேரக்டரில் நடித்துள்ள அன்னபூரணி படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. முன்னதாக படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கு மிகப்பெரிய ப்ரமோஷனாக அமைந்துள்ளது. 


அன்னபூரணி  இதனிடையே இந்தப்படத்தின் சென்சார் நிறைவடைந்து படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.


 மேலும் படம் 2 மணிநேரங்கள் மற்றும் 26 நிமிடங்கள் ரன்டைம் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக ஜெய் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஷங்கரின் உதவி இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ள நிலையில், படத்தில் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, கேஎஸ் ரவிக்குமார், சச்சு, ரேணுகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.


Advertisement

Advertisement