• Apr 15 2026

தங்கத் தாமரை மலரே வா அருகே- ஜொலிக்கும் வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்த நடிகை தமன்னா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் தமன்னா. இவர் கேடி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.தொடர்ந்து கல்லுாரி என்னும் படத்தில் நடித்த பின்னர் தான் கவனிக்கத்தக்க நடிகையாக மாறினார்.இதனால் தொடர்ந்து இவருக்கு தமிழ் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது.


அஜித், விஜய், கார்த்தி என்று டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிக்க தொடங்கிய தமன்னா, தற்போது ஹிந்தி சினிமாவில் செம பிஸியாக நடித்து வருகிறார்.சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடிய காவாலயா பாடல் இன்று வரை ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடலாகவே இருக்கின்றது.


இது தவிர வெப் சீரியல்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.தமிழில் இப்போதெல்லாம் அவருக்கு வாய்ப்புகள் குறைய பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு அவர் நடித்த பப்ளி பவுன்ஸர், ப்ளான் ஏ ப்ளான் பி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.


படங்களில் நடிப்பதை தாண்டி நடிகை தமன்னா நிறைய வித்தியாசமான உடைகள் அணிந்து போட்டோ ஷுட் நடத்துவது, நிகழ்ச்சிகளுக்கு செல்வது என பிஸியாக இருக்கிறார்.அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement