• Jun 24 2024

சூரரைப் போற்று படத்தின் ரீமேக்கான 'சர்ஃபிரா' ரிலீஸ் எப்போது தெரியுமா?

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பிரபல  பெண்  இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களின் ஆதரவினால் முன்னணி இயக்குனராக புகழ்பெற்ற இயக்குனர் தான் திருமதி சுதா கோங்காரா.

2020 ஆம் ஆண்டு 'ஏர் டெக்கான்' நிறுவனத்தின் அதிபரான திரு. ஜி. ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை  அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் சூரரை போற்று.

இந்தியாவின் பிரபல தொழிலதிபரின் வாழ்க்கையை, சுய சரிதியை ஒரு சுவாரஸ்ய திரைக்கதையாக வடிவமைத்து உருவாக்கிய இந்த படத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார். இதற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார்.


இந்த நிலையில், தற்போது சுதா கொங்கார இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள சூரரை போற்று படத்தின் ரீமேக் படமான சர்ஃபிரா திரைப்படம் எதிர்வரும் 12ஆம் தேதி வெளியாகும் என அதிகார்வ பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா நடிப்பில் வெளியாகிய மாபெரும் ஹிட் அடித்த சூரரை போற்று படத்தின் ரீமேக் சர்ஃபிரா படத்திற்கும் ஜி.வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். தற்போது இந்த தகவல் பெரும் வைரலாகி  வருகின்றன.


Advertisement

Advertisement