• Oct 30 2024

பூர்ணிமாவுக்கு பதிலாக ஐஷு எவிக்ட் ஆகிப் போனதற்கு காரணம் என்ன தெரியுமா?- வெளிவந்த உண்மை ரகசியம்

stella / 11 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது.இந்த சீசன் ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே ஹவுஸ் மேட்ஸுகளுக்கு டஃப் போட்டியாளராக திகழ்ந்தவர் பிரதீப் ஆண்டனி. எப்படியும் இவர் பல நாட்கள் வீட்டுக்குள் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரெட்காட் கொடுக்கப்பட்டதால் பாதியிலிருந்து வெளியேறினார்.

 கமல் ஹாசன் மற்றும் பிக்பாஸின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக பெண்கள் பாதுகாப்பை காரணம் காட்டி அவர் வெளியேற்றப்பட்டது அறம் இல்லை. அதிலும் நிக்சன் ஐஷுவிடம் எல்லை மீறி நடக்கிறார்; மாயா, பூர்ணிமா ஆகியோர் 18+ ஜோக்குகளை அசால்ட்டாக அடிக்கின்றனர். அவர்கள் எல்லாம் வீட்டில் இருக்க பிரதீப் ஏன் வெளியேற்றப்பட வேண்டும் என ரசிகர்கள் கேட்டு வந்தனர்.


இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த சனிக்கிழமை எப்பிஷோட்டில் ஹவுஸ்மேட்ஸின் அதிகாரத்தால் தான் பிரதீப் வீட்டை விட்டு வெளியேறினார் என்றும் இதற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். கடந்த வாரத்தில் நாமினேஷனில் இருந்தவர்களில் பூர்ணிமா எவிக்ட் செய்யப்படுவார் என்று தகவல் பரவியது. 

ஆனால் ஐஷு எவிக்ட் செய்யப்பட்டார்.  இந்நிலையில் பூர்ணிமாவுக்கு பதில் ஐஷு வெளியே போனதற்கான காரணம் குறித்து தெரிய வந்திருக்கிறது. அதாவது, பிக்பாஸ் 7 தொடங்கப்பட்டபோது அவர் நன்றாகவே விளையாடிவந்தார். அதை பார்த்து ஐஷுவின் குடும்பத்தினரும் ஹேப்பி மூடில்தான் இருந்தனராம். ஆனால் நாட்கள் செல்ல செல்ல நிக்சனுடன் ஏற்பட்ட பழக்கம் அவருக்கு வெளியில் கெட்ட பெயரை பெற்றுக்கொடுத்துவிட்டதாக குடும்பத்தினர் நினைத்தார்களாம். 

இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவை தொடர்புகொண்ட அவர்கள், அவள் விளையாண்டது போதும். 50 லட்சம் பணம், புகழைவிடவும் எங்களது மகளின் பெயர்தான் முக்கியம் அவளை வெளியே அனுப்புங்க என்று வற்புறுத்தியதால்தான் அவர் வெளியேற்றப்பட்டார் என்று தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement