• Dec 03 2024

அமலாபாலை எல்லோரும் நம்ப வைச்சே ஏமாத்திறாங்க,-காதலித்த வாழ்க்கையில் சுதந்திரமில்லை- உண்மையை உடைத்த பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்முன்னணி நடிகையாக விளங்கிய அமலா பால், மைனா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.அதன்பின் விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் முற்றிலும் புதிய முயற்சி என்பதால் பலரின் பாராட்டுகளை பெற்றது.தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் அமலாபால் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


 அண்மையில் தனது பிறந்தநாள் அன்று காதலர் ஜகத் தேசாய்யின் போட்டோவை ஷேர் செய்திருந்தார். அத்தோடு இர்களுக்கு நவம்பர் 5ம் தேதி பிரமாண்டமாகத் திருமணமும் நடைபெற்றது.இந்நிலையில் அமலா பால் கடந்து வந்த வலிகள் குறித்து, கோடாங்கி யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அமலா பாலுக்கு மட்டும் வலி என்று சொல்ல முடியாது, 

திரைத்துறையில் வரும் பெண்கள் அனைவருக்கும் வெளியில் சொல்ல முடியாத ரணங்கள் அதிகமாகத்தான் இருக்கும்.நடிகை அமலா பால், அனைவர் இடத்திலும் நன்றாக பேசக்கூடியவர், அது அவரிடம் நேரடியாக பேசி பழகியவர்களுக்கு நன்றாக தெரியும். இயக்குநர் விஜய்யை காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமண வாழ்க்கையில் அவருக்கான சுதந்திரம் இல்லை, அவர் செய்த பல தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு அவரை நெருக்கியதால், முதல் கணவரை விட்டு பிரிந்தார்.


 இப்போதும், காதலித்துத்தான் இரண்டாம் திருமணம் செய்து இருக்கிறார். ஆனால், அமலா பால் மற்ற நடிகைகளை விட அதிகமான வலிகளை அனுபவித்து இருக்கிறார். இதற்கு காரணம் அவர் அனைவரையும் நம்பி விடுவார். ஆடை படத்தில் கூட அமலா பால் நடித்தது அப்படித்தான். இந்த படம் வெளியானால்,உச்சத்திற்கு போய்டுவீங்க, படத்தின் கதை அப்படிப்பட்டது என்று சொல்லி நம்ப வைத்தனர் ஏமாற்றினார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement