• Jan 18 2025

"தங்கலான்" படத்திற்கு தணிக்கை குழு வழங்கிய சர்டிபிகேட் என்னனு தெரியுமா ?

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

இந்திய திரைப்பட துறையில் மிகப்பெரிய மாற்றமாக 1952 ஆம் ஆண்டு உருவானது 'இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு'. திரையில் ஒழுக்கத்தையும், அறநெறிகளையும் மீறாத வகையில் திரைப்படங்கள் வெளிவரக்கூடிய வகையில் தணிக்கை சான்றிதழ்களை வழங்கி வருகிறது இக் குழுமம். 

திரைப்பட தணிக்கை குழு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் - Live  chennai tamil

இக் குழு ஒவ்வொரு திரைப்படத்தையும் பார்வையிட்டு, பொதுமக்கள் அனைவரும் பார்வையிடலாம் என்று கருதும் படங்களுக்கு "U " எனும் சான்றிதழும் ,வயது வந்தவர்கள் மட்டும் பார்வையிடலாம் எனக் கருதும் படங்களுக்கு "A" எனும் சான்றிதழும், வயது வந்தவர்கள் மட்டும் பொதுவாகப் பார்வையிடலாம் என்பதாகக் கருதும் படங்களுக்கு "UA" எனும் சான்றிதழும், சிறுவர்கள் பார்வையிடலாம் எனும் கருதும் படங்களுக்கு "C" என்றும் சான்றிதழும் அளிக்கின்றன. 


இந்நிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வெளியாகவுள்ள திரைப்படமான "தங்கலான்" திரைப்படத்தை பார்வையிட்ட தணிக்கை குழு குறித்த திரைப்படத்திற்கு "UA" சான்றிதழை வழங்கியுள்ளது.வருகிற  ஆகஸ்ட் 15 இல் உலக அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள "தங்கலான்" திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.



Advertisement

Advertisement