தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஷேன் நிகாம், தற்போது தனது 25-வது படமான ‘பல்டி'யை நடித்து முடித்துள்ளார். இது ஒரு இருமொழி திரைப்படமாக உருவாகியுள்ளது. உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு ஒரு சமூகக் கருத்துடன் கூடிய கதையாக படம் எடுக்கப்பட்டுள்ளது.
‘பல்டி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படத்தில் ஷேன் நிகாமுடன் இணைந்து, பிரீத்தி அஸ்ரானி, சாந்தனு பாக்கியராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதற்கிடையே, ‘பல்டி’ படக்குழு நடிகர் சாந்தனுவின் கதாபாத்திர அறிமுக வீடியோவை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. இதில், சாந்தனு “குமார்” என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வீடியோவில் அவர் கபடி வீரராக மாறும் பயணமும், அவரது தனிச்சிறப்பும் அழகாக எடுக்கப்பட்டுள்ளது.
சாந்தனுவின் இந்த வேடம், அவரது நடிப்புத்திறனை வெளிக்கொணரக் கூடியதாக இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. அவரது தோற்றம் மற்றும் நடிப்பு, இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!