• Nov 22 2025

நடிகர் அபிநய்க்கு உதவிய முக்கிய பிரபலம்... திரைத்துறையை நெகிழ்ச்சியடைய வைத்த சம்பவம்.!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தன்னை நிரூபித்த நடிகர் அபிநய், கடந்த சில மாதங்களாக கல்லீரல் பாதிப்பு காரணமாக கடுமையாகப் போராடி வருகிறார். இவரது நிலைமை மற்றும் மருத்துவ செலவுகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியதும், ரசிகர்கள், திரைத்துறையினர் மற்றும் சமூக ஊடக பயனர்கள் அனைவரிடமும் மிகுந்த பரிதாப நிலை ஏற்பட்டது.


இந்நிலையில், பல்வேறு பிரபலங்கள் அவருக்கு உதவி செய்யத் தொடங்கியுள்ளனர். கடந்த நாட்களில், KPY (கலக்கப்போவது யாரு) புகழ் பாலா, தனது பங்களிப்பாக ரூ.1 லட்சம் வழங்கி உதவியிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வெளியானதும் வைரலாகப் பரவியது.


அதைத் தொடர்ந்து, தற்போது நடிகர் தனுஷ் அவரது மருத்துவ செலவுக்காக ரூ.5 லட்சம் வழங்கி உதவியுள்ளார் என்பதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் திரைத்துறையிலும், ரசிகர்கள் மத்திலும் தனுஷின் செயல் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது.


Advertisement

Advertisement