• May 21 2025

ரசிகர்களின் கனவுக் கன்னி சமந்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?வெளியான உண்மை இதோ..!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிப் படங்களிலும் முன்னணி நடிகையாக திகழும் சமந்தா ரூத் பிரபு, இன்று தனது 38வது பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றார். இந்த சிறப்பு நாளில், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்து வருகின்றனர்.

2009ம் ஆண்டு "வின்னைத் தாண்டி வருவாயா" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சமந்தா, ஆரம்பத்திலேயே தனது அழகு மற்றும் நடிப்புத் திறமைகளால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். அதன்பின், விஜய், தனுஷ், சூர்யா மற்றும் விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார். சமீப காலமாக, "ரக்த பிரம்மந்த்: தி ப்ளடி கிங்டம்" என்ற பிரம்மாண்ட வெப் சீரிஸிலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.


ஒரு ஹீரோயினாக மட்டுமின்றி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் தன்னை நிலைநிறுத்தி, தனக்கென ஒரு சிறப்பான ரசிகர் மன்றத்தையும் உருவாக்கியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அரிய நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, திரையுலகில் இருந்து இடைவேளை எடுத்துக் கொண்டிருந்தார். அதன்பின்  "சிட்டாடல்" என்ற வெப்சீரிஸில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

அந்தவகையில் சமந்தாவின் பிறந்த நாளையொட்டி, அவரின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அதன்படி, சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு 101 கோடிக்கு மேல் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement