• Jan 19 2025

அதிக திரையரங்குகளில் வெளியான அயலான் திரைப்படத்தின் மொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்றைய தினம் உலகம் முழுவதும் வெளியாகிய திரைப்படம் தான் அயலான். கேஜேஆர் ஸ்டூடியோ தயாரிப்பில் உருவான இப்படத்தில்  சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.இயக்குநர் ரவிக்குமார் ஒட்டுமொத்தமாக சுமார் 6 ஆண்டுகள் இந்தப் படத்திற்காக உழைத்துள்ளார். ஆரம்பத்தில் பட்ஜெட் பிரச்சினை காரணமாக ட்ராப் ஆகும் சூழல் இருந்தாலும், அயலான் மீது நம்பிக்கை வைத்து படத்தை முடிக்க காத்திருந்தார்.


பின்னர் கிராபிக்ஸ் பணிகளுக்காகவும் பல மாதங்கள் காத்திருந்து அயலான் படத்தை முடித்தார். இதனையடுத்து அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியான அயலான் படத்துக்கு சிறப்பான ஓபனிங் கிடைத்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அயலான் படத்தை திரையரங்குகளில் சென்று கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில், அயலான் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, அயலான் முதல் நாளில் 4 முதல் 5 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியான சிவகார்த்திகேயன் படம் அயலான் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement