• Jan 18 2025

கேப்டன் மில்லர் திரைப்படம் தான் வின்னர், தனுஷிற்கு மாலை அணிவித்து பாராட்டிய தயாரிப்பாளர்- செம குஷியில் படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் நடிப்பில் நேற்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து கன்னட நடிகர் ஷிவ்ராஜ்குமார், சந்தீப் கிஷான், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ், நாசர் உள்பட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தினை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளதோடு ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கிய நிலையில், படத்தில் ரத்தம் தெறிக்கும், துப்பாக்கி சத்தமும் கதை பிளந்தது. 


 இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை நடிகர் தனுஷ் தன் மகன்களுடன் ரோகினி தியேட்டரில் பார்த்து ரசித்தார். இப்படம் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் நடந்ததை எடுத்துக் காட்டுகின்றது.மேலும் இப்படம் ரூ.8.65 வசூலித்து பொங்கல் ரேஸில் முதல் இடத்தில் உள்ளது. 

இனி வரும் நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால் கேப்டன் மில்லர் திரைப்படம் மேலும், வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தின் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் நடிகர் தனுஷை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 


இதையடுத்து, தயாரிப்பு சத்ய ஜோதி பிலிம்ஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், தனுஷூக்கு வாழ்த்து தெரிவித்த புகைப்படத்தை பதிவிட்டு, வின்னர் கேப்டன் மில்லர்... உலகம் முழுவதும் இந்த பிளாக்பஸ்டர் வரவேற்பை கொடுத்த ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளது.


Advertisement

Advertisement