• Mar 26 2026

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் மூன்றாம் நாள் கலெக்ஷன் எத்தனை கோடி தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தீபாவளியை முன்னிட்டு  கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான்  ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.இப்படத்தில் இவர்களுடன் ஷைன் டாம் சாக்கோ, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்

1975ம் ஆண்டு நடக்கும் பீரியட் ஜானர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் தமிழ் சினிமாவில் முதல் கறுப்பு ஹீரோ என்ற டெம்ப்ளேட்டை வைத்து ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளார்.


படம் முதல் நாளில் 2.5 கோடி மட்டுமே வசூலித்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து தீபாவளி பண்டிகை என்பதாலும், இந்த படத்துக்கு போட்டியாக வெளியான ஜப்பான் எதிர்பார்த்த விமர்சனத்தை பெறாததாலும் ஜிகர்தண்டா படத்தின் வசூல் அதிகரித்துள்ளது. அதன்படி படம் இரண்டாவது  நாளில் 4.5 கோடியை வசூலித்து மாஸ் காட்டியது.

இந்நிலையில், இப்படம் வெளிவந்து மூன்று நாட்களில் முடிவடைந்துள்ள நிலையில் உலகளவில் ரூ. 16 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement