• May 14 2026

விஜய் அரசு அனுமதி கொடுத்தும் காட்சி ரத்து? சூர்யா ரசிகர்களுக்கு இடியாய் இறங்கிய செய்தி

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

கருப்பு படத்தின் 9 மணி சிறப்பு காட்சி தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அறிவித்துள்ளார்.

கருப்பு திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. சூர்யா நடிப்பில், ஆர். ஜே. பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா கிருஷ்ணன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

படத்தின் முன்பதிவு விற்பனை தமிழ்நாட்டில் சிறப்பாக நடந்ததாக கூறப்படும் நிலையில், சில திரையரங்குகளில் திடீரென ஆன்லைன் முன்பதிவுகள் நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஆர். ஜே. பாலாஜி, “ கருப்பு படம் பல தடைகளை கடந்து வந்துள்ளது. தற்போதைய பிரச்சனைகளையும் சமாளிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், தமிழ்நாடு அரசு 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியிருந்த போதிலும், தொழில்நுட்ப மற்றும் உள்புற பிரச்சனைகள் காரணமாக அந்த காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் முதல் நாள் முதல் காட்சிக்காக காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement