• May 13 2026

த்ரிஷாவுக்கு இத்தனை கோடியா.? லீக்கான 'கருப்பு' பட சம்பள விவகாரத்தால் ஷாக்கில் ரசிகர்கள்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் நாளை வெளியாக இருப்பதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தை நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ளார். நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு படம் திரைக்கு வருவதால், அதன் மீது கூடுதல் கவனம் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் உருவாகியுள்ளது.


படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சூர்யாவும் ஆர்ஜே பாலாஜியும் பல்வேறு ஊடக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு படத்தைப் பற்றி பேசிவருகின்றனர். ஆனால் நடிகை திரிஷா எந்தவொரு புரமோஷன் நிகழ்ச்சியிலும் பங்கேற்காதது கவனத்தை ஈர்த்துள்ளது. 

இதற்கு தயாரிப்பாளர் தரப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருக்கலாம் என திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இது தொடர்பாக திரிஷா முன்பே சமூக வலைத்தளத்தில் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும், படத்தில் நடித்ததற்காக திரிஷா பெற்ற சம்பளம் பற்றிய தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. அவர் சுமார் 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. அதே சமயம், படத்தின் ஹீரோவான சூர்யா சுமார் 45 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த சம்பள விவரங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் படம் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், வெளியீட்டுக்குப் பிறகு படம் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதே அனைவரின் கவனமாக உள்ளது.

Advertisement

Advertisement