• Nov 22 2025

இசையமைப்பாளர் தமனின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?- ஒரு படத்திற்கு இசையமைக்க இத்தனை கோடி வாங்குகின்றாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

2003 ஆம் ஆண்டு, இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகியவர் தான் தமன்.இந்தப் படத்தில் சித்தார்த்தின் நண்பனாக  கிருஷ்ணா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து சிந்தனை செய், அய்யனார், மிஸ்டர் மஜ்னு, சூரியவன்ஷி, போன்ற திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

 இதைத் தொடர்ந்து தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலுமே பல படங்களுக்கு இசையமைத்தார். குறிப்பாக தமிழில் சிந்தனை செய், ஈரம், தில்லாலங்கடி, மாஸ்கோவின் காவிரி, அய்யனார், போன்ற படங்களில் துவங்கி சமீபத்தில் வெளியான வாரிசு படம் வரை இவற்றின் இசை தான் திரையரங்குகளில் பட்டையை கிளப்பியது.


தெலுங்கிலும் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், பவன் கல்யாண், சிரஞ்சீவி, என அனைத்து  முன்னணி நடிகர்கள் படங்களுக்கும் தமன் இசையமைத்துள்ளார். மிகக் குறுகிய காலத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து, இசை இளவரசராக வலம் வரும் தமன் இன்று தன்னுடைய நாற்பதாவது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார்.

இந்த நிலையில் இவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.ஒரு படத்திற்கு இசையமைக்க 3 முதல் 5 கோடி வரை சம்பளமாக பெறும் தமன், அது தவிர சில ரியாலிட்டி ஷோக்கள் மூலமாகவும் மாத மாதம் 10 முதல் 15 லட்சம் வரை சம்பளமாக பெற்று வருகிறார். இவருக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் ஸ்டுடியோ, வீடு ஆகியவை உள்ளது. 


அதே போல் ஆந்திர மாநிலத்திலும் இவருக்கு சொந்தமாக பிரம்மாண்ட வீடு, உள்ளது. சில சொகுசு கார்கள் வைத்துள்ள தமன் வருடத்திற்கு 20 முதல் 25 கோடி வரை சம்பளமாக பெறுவார் என தெரிகிறது. மேலும் இவரின் சொத்து மதிப்பு என பார்த்தால், 50 முதல் 70 கோடி வரை சொத்துக்கள் வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.


Advertisement

Advertisement