• Nov 01 2024

விஜயகாந்தின் காலில் மூன்று விரல்கள் இல்லையா?- இத்தனை துன்பங்களை கேப்டன் அனுபவித்தாரா?

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜயகாந்த் கடந்த 26ந் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் மூச்சுத் திணறல் காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்தார்.இவருடைய உடலுக்கு பொதுமக்கள், திரையுலகினர், கலைத் துறையினர் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இவரது இறுதி ஊர்வலம் மதியம் 1 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது வரை மெதுமெதுவாக கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.இந்த ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.


சினிமா, அரசியல் புயல் போல இருந்த விஜயகாந்த், 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பின் அவர், பழைய விஜயகாந்தாக பார்க்க முடியவில்லை. நிற்பது, நடப்பதில் தடுமாற்றம், பேசுவதில் தடுமாற்றம் என நாளுக்கு நாள் அவர் உடல் நிலை மோசமாகி வெளியிலே தலைகாட்டாமல், இருந்தார். 

சட்டசபையில் எதிர்கட்சி இருக்கையில் அமர்ந்து இடிபோல் முழக்கமிட்ட விஜயகாந்த் பேசமுடியாமல் தடுமாறியதைப் பார்த்து ரசிகர்கள் கலங்கி போனார்கள். உடல்நலக் குறைவு காரணமாக தொடர்ந்து மருந்துகள் உட்கொண்டு வந்த விஜயகாந்துக்கு 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காலில் வீக்கம் ஏற்பட்டது. ரத்த ஓட்டம் சீராக இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, மருத்துவர்களின் ஆலோசனை பேரில் காலில் இருந்த 3 விரல்கள் அகற்றப்பட்டன.


இதுகுறித்து தேமுதிக தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்திருந்தது. அதில், நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மூன்று விரல்கள் அகற்றப்பட்டது. 

மேலும், கால் விரல்கள் அகற்றப்பட்ட செய்தியை தேமுதிக தலைமை அலுவலம் அறிக்கை வெளியிட்டு இருந்தது. இப்படி ஊசி, மருந்து மாத்திரை என படாதபாடுபட்டு வந்தார் என்றும் தற்பொழுது தகவல் வெளியாகி  வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement